ஜிஎஸ்டி பதிவாளர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது!

ஜிஎஸ்டி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
 | 

ஜிஎஸ்டி பதிவாளர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது!


ஜிஎஸ்டி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது என மத்திய நிதியமைச்சகம்  இன்று தகவல் தெரிவித்துள்ளது.  

கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி நாடு முழுவதும் ஒரே வரியாக ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. முதலில் சில எதிர்ப்புகள் கிளம்பினாலும் கடந்த ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்து வருகிறது என மத்திய நிதி அமைச்சகம் கூறி வருகிறது.

இந்த நிலையில் ஜனவரி 24, 2018 வரை ஜிஎஸ்டியை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில் ரூ. 86,073 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் 17.11 லட்சம் பேர் தொடர்ந்து ஜிஎஸ்டி செலுத்தி வருகின்றனர் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP