பிரான்ஸை முந்தி 6வது இடத்தை பிடித்தது இந்திய பொருளாதாரம்

உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளதாக உலக வங்கியின் புள்ளி விவர அறிக்கை வெளியிட்டுள்ளது.
 | 

பிரான்ஸை முந்தி 6வது இடத்தை பிடித்தது இந்திய பொருளாதாரம்

உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளதாக உலக வங்கியின் புள்ளி விவர அறிக்கை வெளியிட்டுள்ளது. 

நடப்பு ஆண்டுக்கான பொருளாதார புள்ளி விவர அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா பிரான்ஸை பின்னுக்குத் தள்ளி உலகின் 6- வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. 2017ம் ஆண்டின் படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.597 ட்ரில்லியன் டாலராக உள்ளது. கடந்த 7 காலாண்டுகளாக சரிந்து வந்த இந்தியாவின் பொருளாதாரம் 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளதை உலக வங்கியின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பொருளாதாரம் 7.4% வளர்ச்சி அடைந்துள்ளது.  கடந்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இருமடங்காகி உள்ளது. ஆசிய நாடுகளில் சீனாவின் பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளது. வலுவான தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேலும் பெருக்க உதவும் என்று உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸை முந்தியுள்ளது.  சர்வதேச நிதி முனையத்தின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2019 ல் இது 7.8 சதவீதமாக உயரும். இதனடிப்படையில் 2032ல் இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் 3வது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP