ஜெட் ஏர்வேஸை வாங்கத் துடிக்கும் டாடா குழுமம்! 

நீண்ட கால நஷ்டம், கடன் ஆகவையால் ஜெட் ஏர்வ்வேஸ் தினறி வருகிறது. எனவே பங்கு சந்தை மூலம் முதலீடுகளைத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்க டாடா குழுமம் முயற்சித்து வருகிறது.
 | 

ஜெட் ஏர்வேஸை வாங்கத் துடிக்கும் டாடா குழுமம்! 

நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வரும் ஜெட் ஏர்வேஸின் முக்கியப் பங்குகளை வாங்கும் பேச்சுவார்த்தையில் டாடா குழுமம் விடாப்பிடியாக உள்ளது. 

நீண்ட கால நஷ்டம் மற்றும் கடன் தொகை அதிகரித்துள்ளதால் ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் கூட அளிக்க முடியாமல் ஜெட் ஏர்வ்வேஸ் தினறி வருகிறது. எனவே பங்கு சந்தை மூலம் முதலீடுகளைத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.  டாடா குழுமம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து வருகிறது.

இது குறித்து நீண்ட காலமாக டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வந்திருந்தாலும் நிர்வாகத்தினைத் தங்களது பொறுப்பில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜெட் ஏர்வ்வேஸ் முன் வைத்து வருகிறது. 

இந்தியாவின் முக்கிய விமானச் சேவைகளான ஏர்ஏசியா, விஸ்தரா போன்ற விமான நிறுவனங்களின் இந்திய சேவையினை நிர்வகித்து வரும் டாடா குழுமத்திற்கு ஒரு காலத்தில் சொந்தமாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நேரு தலைமையிலான மத்திய அரசு ஓர் உத்தரவு மூலம் தட்டிப்பறித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போதைய காலகட்டத்தில் நீண்ட காலமாக நஷ்டத்தில் மட்டுமே இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தினை வாங்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் டாடா குழுமம் பிற விமானப் போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து வெற்றிகரமான சேவையினை வழங்கி வருகிறது.

இதத்தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது. எத்தியாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஜெட் ஏர்வேசில் 35 மில்லியன் டாலர் மதிப்புடைய 24 சதவீத பங்குகள் உள்ளது. இந்நிலையில் எத்தியாட் ஜெட் ஏர்வேஸிஸிருந்து வெளியேற நீண்ட நாட்களாகவே துடித்து வருகிறது.

டாடா குழுமம் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்க முடிவு செய்தால் அதில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் எதியாட் ஏர்வேஸ்க்கு சொந்தமான பங்குகளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல் இந்த இணைவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். 

இது குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்க டாடா குழுமமும் ஜெட் ஏர்வேஸின் தலைமையும் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில் ஜெட் ஏர்வேஸின் முக்கியப் பங்குகளை வாங்கும் பேச்சுவார்த்தையில் டாடா குழுமம் விடாப்பிடியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP