20 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 20 புதிய உள்நாட்டு விமானங்கள் இயக்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
 | 

20 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 20 புதிய உள்நாட்டு விமானங்கள் இயக்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் பயணிகளின் வசதிக்காக 20 புதிய வழித்தடங்களில் தங்களது விமானங்களை இயக்க உள்ளதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி 18 விமானங்கள் மும்பையை மையமாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மும்பையிலிருந்து திருவனந்தபுரம், விஜயவாடா மற்றும் திருப்பதிக்கு 26ம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளது என்றும் இந்த விமானங்கள் தினசரி இயக்கப்படும் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP