1. Home
  2. வர்த்தகம்

கூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்


இணையத்தில் பொருட்கள் வாங்கும் பயனர்களின் வசதிக்காக தேடுபொறியில் ஷாப்பிங் டேப்பை(Tab) உருவாக்குவதற்காக முன்னணி இணைய வர்த்தக நிறுவனங்களுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அண்மைகாலமாக ஆன்லைனில் ஷாப்பிங்கில் செய்வது ட்ரெண்டாக மாறி வருகிறது. நேரத்தையும், அலைச்சலையும் மிச்சப்படுத்தவும், கடைகளுக்கு சென்று வாங்குவதை விட குறைவான விலையில் விற்பனை செய்வதால் ஆன்லைன் ஷாப்பிங் மீதான மோகம் இன்றைய இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், ஷாப்பிங் டேக் என ஒரு டேப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஆன்லைன், ஆப்லைன் என எப்போது வேண்டுமானாலும் இணையதளம் மூலம் உணவு முதல் எல்லாவற்றையும் ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.

கூகுளில் தற்போது செய்திகள், புகைப்படங்கள், வீடியோஸ் என பல டேப்புகள் உள்ளன. இந்த வரிசையில் தற்போது "ஷாப்பிங்" என்ற டேப்பும் இணையவுள்ளது. இதற்காக ஃபிலிப்கார்ட், ஸ்னாப் டீல், பேடிஎம் மால் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்களுடன் கூகுள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த டேப்பானது கூகுள் தேடுபொறியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like