சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு: ஐந்தே நிமிடத்தில் கோடிகளை இழந்த முதலீட்டாளர்கள்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவடைந்தது. இதனால் சந்தையில் முதலீட்டாiளர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். வெறும் ஐந்தே நிமிடத்தில் கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்தனர்.
 | 

சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு: ஐந்தே நிமிடத்தில் கோடிகளை இழந்த முதலீட்டாளர்கள்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் என்ற இதுவரை இல்லாத சரிவை சந்தித்துள்ளது. இதனால் சந்தை முதலீட்டாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  வெறும் ஐந்தே நிமிடத்தில் கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்ததாக பங்குச்சந்தை ஆலோசகர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.  

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டிருப்பதாலும் அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ளதாலும் ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. இதே நிலையில் பல நாடுகளின் கரன்சி மதிப்பும் இறங்குமுகத்தில் உள்ளது. 

ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வந்ததால் சில காலம் ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் சில தினங்களாக இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அமெரக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.46 ஆக சரிந்தது. இது இதுவரை ரூபாய் மதிப்பு சந்தித்திடாத சரிவு. 

இதன் தாக்கத்தால் பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். முந்தைய நாள் வர்த்தக நேர இறுதியில் 34,760 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் இன்றைய காலை நேர நிலவரப்படி ஆயிரம் புள்ளிகள் வரை கிடுகிடுவென சரிந்து, 33,723 புள்ளிகளை தொட்டது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 350 புள்ளிகள் வரை சரிந்து 10,155 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சில நிமிடங்களில் ரூபாய் 4 லட்சம் கோடிகள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெருமளவில் சரிவை சந்தித்தன.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP