வாராக்கடன்கள் அதிகரிக்க இதுதான் காரணம்: ரகுராம் ராஜன் அறிக்கையில் பகீர் தகவல்!

வாராக்கடன் அதிகரிக்க வங்கிகளின் அதீத நம்பிக்கை தான் காரணம் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அரசு முடிவெடுப்பதில் ஏற்பட்ட மந்த நிலை குறித்தும் குற்றம்சாட்டி உள்ளார்.
 | 

வாராக்கடன்கள் அதிகரிக்க இதுதான் காரணம்: ரகுராம் ராஜன் அறிக்கையில் பகீர் தகவல்!

வாராக்கடன் அதிகரிக்க வங்கிகளின் அதீத நம்பிக்கை தான் காரணம் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்புக்கு காரணம் என்ன என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனிடம் நாடாளுமன்ற நிலைக்குழு விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார். அந்த அறிக்கையில், வங்கிகளின் அதீத நம்பிக்கையும், பொருளாதார வளர்ச்சியில் மிதமான போக்கு, முடிவெடுப்பதில் அரசின் மந்த நிலை ஆகியவை தான் வாராக்கடன் அதிகரிக்கக் காரணம் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் எஸ்டிமேட்ஸ் கமிட்டியின் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு அளித்துள்ள அறிக்கையில், “நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சந்தேகத்துக்குரிய விதங்களில் ஒதுக்கீடு, இதுகுறித்த விசாரணை மீதான அச்சம் உள்ளிட்ட பலதரப்பட்ட ஆட்சி நிர்வாகப் பிரச்னைகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகளின் முடிவெடுக்கும் திறன்களில் மந்தம் ஆகியவை வாராக்கடன்களுக்கு காரணம்" என தெரிவித்துள்ளார். 

பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்த 2006-2008 காலக்கட்டத்தில் தான் அதிக அளவில் வாராக்கடன்கள் உருவாகின. இந்த காலக்கட்டத்தில் தான் வங்கிகள் தவறிழைத்தன. கடந்த கால வளர்ச்சி, செயல்திறனை எதிர்காலத்துக்கானதாகவும் மதிப்பீடு செய்தனர். புரோமோட்டர்களின் முதலீட்டு வங்கியின் அறிக்கைகளை வைத்து வங்கிகள் சில முறைகளில் கடன்களை வழங்க முடிவெடுத்தன. இதில் வங்கிகள் தங்களை ஆராய்ந்து பார்க்கத் தவறிவிட்டன. 

வளர்ச்சி என்பது நம் எதிர்பார்ப்பிற்கு இணங்க நிகழாது. ஆண்டுக் கணக்கான வலுவான உலக வளர்ச்சி உலக பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு மந்தமடையவே செய்யும். இது இந்தியாவுக்கும் நிகழ்ந்தது. பலதரப்பட்ட திட்டங்களுக்கான தேவை எதிர்நோக்குதல் நடைமுறைக்கு எதிராக அமைந்தது, இதற்கு காரணம் உள்நாட்டுத் தேவை மந்தமடைந்திருந்தது.

வங்கியாளர்களின் அலட்சியம், அளவுக்கு மீறிய நம்பிக்கை, கடன்தாரர்களை மதிப்பிடுவதில் திறமைக் குறைவும் இதில் அடங்கும்" என தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP