ஜியோவில் நீடிக்கும் பிரச்னை! பதற்றத்தில் வாடிக்கையாளர்கள்

ஏர்செல்லை தொடர்ந்து ஜியோ சேவைகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட இந்த பிரச்னை இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை என வாடிக்கையாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 | 

தமிழகம் முழுவதும் ஏர்செல் சிக்னல் கிடைப்பதில் கடந்த சில தினங்களாகவே பிரச்னை ஏற்பட்டது. இதனால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் ஏர்செல் நிறுவனம் திவாலனது எனவும். ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு மாறும்படியும் அதிகாரபூர்வமாக ஏர்செல் நிறுவனம் தெரிவித்ததுள்ளது.

இந்நிலையில், ஜியோவும் நேற்று முதல் சிக்னல் சிக்கலில் சிக்கியது. ஜியோவின் இணைய சேவையில் பெரும்பாலும் எந்தவித பிரச்னை இல்லையென்றாலும், ஜியோவின் இன்கம்மிங், அவுட்கோயிங் கால்களில் நேற்று இரவு ஏற்பட்ட பிரச்னை இன்றும் ஒரு சிலருக்கு மட்டும் தொடர்வதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு ஜியோ நிறுவனம், “எங்களது நெட்வொர்கில் சில இடங்களில் பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளது. பிரச்னைகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவை சரிசெய்யப்படும். அதுவரை எங்களுடன் தொடர்பில் இருங்கள்” என்று ட்விட்டரில் பதிலளித்துள்ளது.

உலகின் தலைசிறந்த தொலைத்தொடர்பு நிறுவனம் என்று சில தினங்களுக்கு முன்புதான் ஜியோவுக்கு விருது வழங்கப்பட்டது. அதற்குள்ளாக அதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP