பிளே ஸ்டோரில் 10 கோடி தரவிறக்கத்தை கடந்தது Paytm செயலி

ஆன்லைன் பண பரிமாற்ற செயலியான Paytm, பிளே ஸ்டோரில் 10 கோடி முறைக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று Paytm நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இத்தகையை மைல் கல்லை எட்டிய இந்தியாவின் முதல் செயலி எனும் பெருமையை Paytm பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
 | 

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பணபரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. முன்பு இருந்ததை விட தற்போது இணைய வழியிலான பணபரிவர்த்தனையானது அதிகரித்துள்ளது. குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதிக அளவில் இணைய பரிமாற்ற முறையை மக்கள் நாடினர். அப்போது  Paytm அதிகமான மக்களின் தேர்வாக இருந்தது. தற்போது பெட்ரோல் பங்குகள் முதல் பெரிய மால்கள் வரை paytm மூலம் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

நேற்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "Paytm குழுவின் கடின உழைப்பால் 10 கோடிக்கும் மேற்பட்ட தரவிறக்கம் எனும் மைல் கல்லை எட்டி உள்ளோம். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்வோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. BHIM-UPI உடன் இணைந்து செயல்படும் வசதியை கடந்த மாதம் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. சாதாரண மொபைல் ரீசார்ஜ் செய்யும் செயலியாக 2010-ம் ஆண்டு அறிமுகமான paytm தற்போது உலகின் முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியாக உருவெடுத்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP