பேடிஎம், ஏர்டெல் மணி மொபைல் வாலட் யூஸ் செய்பவரா? அவசியம் இதை படிக்கவும்

மொபைல் வாலட் யூஸ் செய்பவர்களின் விவரங்களை அறிந்திட கேஒய்சி (KYC - know your customer) விபரங்களைக் கட்டாயம் சேகரிக்க வேண்டும் என அனைத்து மொபைல் வாலட் நிறுவனங்களுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி கெடு விதித்தது. அந்தக் கெடு நாளையுடன் (28ம் பிப்ரவரி) முடியும் நிலையில், வாலட்டில் இருக்கும் பாக்கி பணத்தைக் கஸ்டமர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெளிவு படுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
 | 

மொபைல் வாலட்கள் மூலம் மணி லாண்டரிங், கருப்புப் பணப் பரிமாற்றங்கள் நடப்பதைத் தடுக்க அனைத்து மொபைல் வாலட் நிறுவனங்களுக்கும் கஸ்டமர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்குமாறு பணித்தது ரிசர்வ் வங்கி. ஒரு வாலட்டின் உண்மையான உரிமையாளர் யார்? அந்த வாலட்டிற்கு எங்கிருந்து பணம் வந்தது? அந்தப் பணத்திற்கான வருமான ஆதாரம் உள்ளதா? எனத் தகவல்களைத் திரட்டும் முயற்சியே இது. 

கடந்த அக்டோபர் 2017ல் இதற்கான வழிகாட்டுதலை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, 50க்கும் மேற்பட்ட 'ப்ரீபெய்ட் இன்ஸ்ட்ருமென்ட்' (prepaid instrument) அல்லது வாலட் வழங்கும் நிறுவனங்களுக்கு கெடு விதித்தது. இதில் ஓலா மணி, சிட்ரஸ், மொபிகுயிக், பேடிஎம், சோடெக்ஸ்ஹோ, ஐ.சி.ஐ.சி.ஐ பாக்கெட்ஸ், எச்.டி.எஃப்.சி பேஸ்ஆப், ஏர்டெல் மணி என இன்னபிற நிறுவனங்களும் அடங்கும். இந்நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்க டிசம்பர் 31இல் இருந்து கடைசித் தேதியை பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு செய்தது. 

அவ்வாறு தகவல்களை அளிக்காத வாலட் கணக்குகளை ரிசர்வ் வங்கி முடக்கலாம் எனச் செய்தி பரவியது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி, வாடிக்கையாளர்கள் தம் வாலட்களில் மீண்டும் 'டாப் அப்' செய்யவோ, மற்றவருக்குப் பணம் அனுப்பவோ முடியாது, ஆனால் இருப்பு உள்ள தொகையைச் செலவு மட்டுமே செய்ய முடியும் எனக் கூறியுள்ளது ரிசர்வ் வங்கி. 

வாலட் கணக்கை சரிபார்க்க, மொபைல் எண் மற்றும் ஆதார் தகவல்கள் கேட்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் குறையலாம் என வாலட் நிறுவனங்கள் கருதினாலும், கருப்பு பண, மற்றும் தீவிரவாதத்திற்கான நிதி முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், விதிகள் தளர்த்தப்பட வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர் விஷயம் தெரிந்தவர்கள். 

ஆக, கேஒய்சி விவரங்கள் அளித்து உங்கள் மொபைல் வாலட்டில் பரிவர்த்தனைகள் தொடர்ந்தால் நலம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP