ஆன்லைன் வர்த்தகம் செய்தால் ஜிஎஸ்டி-யில் சலுகை!- ரூ.100 கேஷ்பேக்

ஆன்லைனில் வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைனில் முறையிலேயே பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் 20 சதவீதத்தை திருப்பித் தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 | 

ஆன்லைன் வர்த்தகம் செய்தால் ஜிஎஸ்டி-யில் சலுகை!- ரூ.100 கேஷ்பேக்

ஆன்லைனில் வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைனில் முறையிலேயே பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் 20 சதவீதத்தை திருப்பித் தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 29வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விதமாக, ரூபே, டெபிட் கார்டு, பீம் ஆப் மற்றும் நெட் பேங்கிங் ஆகிய வழிகளில் பணம் செலுத்தும் வாடிக்கையாளருக்கு கேஷ் பேக் ஆதாவது அதிகபட்சமாக ரூ.100 வரை திருப்பி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இவ்வாறு தெரிவித்தார்.  டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க இத்தகைய முயற்சி எடுக்கப்படுகிறது. 

மேலும் இந்த வரிச் சலுகையை மாநிலங்களே தங்களுக்கு ஏற்றவாறு செயல்படுத்திக்கொள்ளலாம் என்றும் இதனை வெற்றி பெற செய்வது மாநிலங்களின் பொறுப்பு என்றும் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி அடைந்தால் ரூபே, பீம் ஆப் போல உள்ள பரிமாற்ற தளங்களிலும் கிரெடிட் கார்டு போன்றவற்றிலும் இந்தச் சலுகை அளிக்க வாழ்வகை செய்யப்படும் என்றும் ஜி.எஸ்.டி.  மசோதாவுக்கு பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி கவுசிலின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP