ரூ2000க்கு குறைவான பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது

ரூ2000க்கு குறைவான டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு நோ சார்ஜஸ்
 | 

ரூ2000க்கு குறைவான பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது

ரொக்கமில்லாத வர்த்தக முறையில் டெபிட் கார்டு போன்றவற்றை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பணமதிப்பிழப்பு திட்டத்தையடுத்து இணைய பரிவர்த்தனைகளை எளிதாக்கிட பீம் எனும் அரசு செயலியும் மத்திய அரசு திட்டம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றில் ரூ.2000க்கு குறைவாக பரிவர்த்தனை செய்யும்போதும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த கட்டணத்தை இனி செலுத்த தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக, மற்றும் பீம் செயலி மூலம் பண பரிவர்த்தனைகளுக்கு சலுகை அளிக்க முடிவெடுத்த மத்திய அரசு  டெபிட் கார்டு , பீம் செயலி மூலம் ரூ. 2000 வரை பண பரிவர்த்தனைகள் செய்தால் அதற்கான வரியை அரசே செலுத்தும். மேலும் இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. நேற்று முதல் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP