கியூவில் நிற்கத் தேவையில்லை; கலக்கும் அமேசான் சூப்பர்மார்க்கெட்

கியூவில் நிற்கத் தேவையில்லை; கலக்கும் அமேசான் சூப்பர்மார்க்கெட்
 | 

கியூவில் நிற்கத் தேவையில்லை; கலக்கும் அமேசான் சூப்பர்மார்க்கெட்


பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், புதிதாக 'அமேசான் கோ' என்ற சூப்பர் மார்க்கெட் சேவையை துவக்கியுள்ளது. இதில் பில் போடும் கவுன்டர் இல்லாமலேயே ஷாப்பிங் செய்யும் புதிய யுக்தியை அமேசான் கையாண்டுள்ளது.

பொருட்களை வாங்குவதை விட அதற்கு பில் போடுவதற்கு அதிகார நேரம் கியூவில் நிற்க வேண்டிய நிலையை தற்போதய சூப்பர்மார்க்கெட்டுகளில் பார்க்கலாம். இதை நீக்குவதற்காக இந்த புதிய திட்டத்தை அமேசான் சோதனை செய்து வந்தது.

இதன்படி, அந்த சூப்பர்மார்க்கெட்டுக்குள் நுழையும் போதே, அமேசான் கோ ஆப் மூலம் பதிவு செய்து விட வேண்டுமாம். அதன் பின், வாடிக்கையாளர்கள் உள்ளே எடுக்கும் ஒவ்வொரு பொருட்களையும், கேமரா மூலம் நோட்டமிட்டு, அதை பட்டியலிட்டு விடுவார்களாம். எடுத்த பொருள் வேண்டாமென்றால் அதை அங்கேயே திருப்பி வைத்துவிட வேண்டும். பின்னர் ஷாப்பிங் முடிந்து வெளியே செல்லும்போது, வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து, டெபிட், க்ரெடிட் கார்டு மூலம் பில்லுக்கான பணத்தை எடுத்து விடுவார்களாம்.

சியாட்டில் நகரில், இதை சோதனை ஓட்டம் செய்து பார்த்து, அதை விரிவுபடுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. இதில் பல பலன்கள் இருந்தாலும், சில சமயங்களில் ஒரே மாதிரி உடல்வாகு கொண்ட வாடிக்கையாளரை கண்டுபிடிக்க கம்ப்யூட்டர் சிரமப்பட்டதாம். அதேபோல, சிறுவர்கள் எடுத்த பொருட்களை வேறு இடங்களில் மாற்றி வைப்பது, போன்ற சில பிரச்னைகள் இதில் உள்ளதாம்.

முன்னதாக அமெரிக்காவின் பிரபல ஹோல் புட்ஸ் என்ற சூப்பர்மார்கெட் நிறுவனத்தை அமேசான் வாங்கியிருந்ததது. இந்த திட்டம் அமேசான் கோ சூப்பர்மார்கெட்டுகளுக்கு மட்டும்தானா, அல்லது, ஹோல் புட்ஸ் கடைகளிலும் நிறுவப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம். 

ஆனால், இன்றைய தேதிக்கு, கியூ இல்லாத ஒரே சூப்பர்மார்க்கெட் திட்டம் என்பதால், இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நிச்சயம் அமோக வரவேற்பு பெரும், என அமேசான் நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP