கட்டுமான வீடுகளுக்கு ஜிஎஸ்டியில் புதிய சலுகை!

தற்போது கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் புதிய சலுகையை ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது. புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பட்டுள்ளது.
 | 

கட்டுமான வீடுகளுக்கு ஜிஎஸ்டியில் புதிய சலுகை!

கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் புதிய சலுகையை ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது.

புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பட்டுள்ளது. இதுவே குறைந்த விலை வீடுகளுக்கு 1 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. தற்போது இந்த வரியை செலுத்துவதில் கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதன்படி,கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கு, பழைய வரி விகிதப்படி 8 முதல் 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியை நிறுவனங்கள் செலுத்தலாம். இதில் உள்ளீட்டு வரியை அவை திரும்பப் பெறலாம். அதேசமயம், குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியையும் நிறுவனங்கள் செலுத்தலாம். 

தற்போது கட்டுமானத்தில் உள்ள, ஏப்ரல் 1 -ஆம் தேதிக்கு முன் தொடங்கப்படவுள்ள கட்டுமானங்கள் மற்றும் மார்ச் 31 -ஆம் தேதிக்கு முன்பு முடிவடையாத கட்டுமானங்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.

உள்ளீட்டு வரியை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் உள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்ததையடுத்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 34 -ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP