ரயில்வே துறைக்கு வருமானத்துக்கும் அதிகமான செலவு

வருமானத்துக்கும் அதிகமாக இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு செலவு ஏற்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்பதிவு மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இந்த இழப்பீட்டை சரிசெய்து விட முடியும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 | 

ரயில்வே துறைக்கு வருமானத்துக்கும் அதிகமான செலவு

திட்டச் செலவுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் காரணத்தினால், வருமானத்துக்கும் அதிகமான அளவில் செலவினங்கள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் பல மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, பயணிகள் 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வரை ரயில்வே நிர்வாகத்தின் வருமானம் 1.15 லட்சம் ‌கோடியாக உள்ளது. ஆனால் வருமானம் 1.22 கோடியாக இருந்திருக்க வேண்டும். 7 ஆயிரத்து 840 கோடி குறைவாக வசூலாகியுள்ளது.

இதற்கு. திட்டப் பணிகளை அதிக அளவில் மேற்கொண்டு வருவது மற்றும் அதிக அளவிலான விரிவாக்கப்பணிகள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவன மற்றும் ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், விளம்பர செலவுகள் போன்ற பல காரணிகளால் அதிக அளவிலான செலவினங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டு கோடை கால முன்பதிவு மூலம் கிடைக்கும் வருமானத்தின் உதவியுடன் இந்த இழப்பீட்டைச் சரி‌ செய்து விட முடியும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP