ரிசர்வ் வங்கி மீதான மோடியின் ஆதங்கம் சரிதான்- 'சிஎல்எஸ்ஏ' கிறிஸ்டோபர் வூட் கருத்து

ரிசர்வ் வங்கியின் கடுமையான பொருளாதார கொள்கைகள் குறித்த பிரதமர் மோடியின் ஆதங்கம் சரியானது தான் என்கிறார் சிஎல்எஸ்ஏ-வின் நிர்வாக இயக்குனரும் ஆசிய பிராந்தியத்தில் தேர்ந்த சந்தை மதிப்பீட்டாளருமான கிறிஸ்டோபர் வூட்.
 | 

ரிசர்வ் வங்கி மீதான மோடியின் ஆதங்கம் சரிதான்- 'சிஎல்எஸ்ஏ' கிறிஸ்டோபர் வூட் கருத்து

ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கைகள் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் ஆதங்கம் சரியானது தான் என்கிறார் சிஎல்எஸ்ஏ-வின் நிர்வாக இயக்குனரும் ஆசிய பிராந்தியத்தில் தேர்ந்த சந்தை மதிப்பீட்டாளருமான கிறிஸ்டோபர் வூட்.

சந்தைகள் மற்றும் முதலீட்டு வல்லுநர், சொத்து மேலாண்மை, பெருநிறுவன நிதி மற்றும் மூலதன சந்தைகள், பெருநிறுவன மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கான முதலீடுகளில் பாதுகாப்பு மற்றும் சொத்து மேலாண்மை ஆகியவற்றை குறித்து ஆசிய அளவில் ஆலோசகர், சிஎல்எஸ்ஏ நிறுவன நிர்வாக இயக்குனர் என பன்முக முகம் கொண்டவர் கிறிஸ்டோபர் வூட்.

இந்த நிறுவனத்தில் 21 முதலீட்டாளர் மாநாடு இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் பிரபல வணிக இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ''பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய மத்திய அரசு மேற்கொண்ட மிக தைரியமான முடிவு.  அதேபோல, திவால் சட்ட திருத்தம் மிகவும் முக்கியமான சீர்திருத்த நடவடிக்கை. அது மோடி அரசின் மிக முக்கிய நீண்ட கால பலன் தரும் தத்ரூப முடிவாகும். 

இந்த அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளால் நாட்டில் சலசலப்பு இருக்க செய்யும் தான். அதன் விளைவாக அடுத்து வரும் தேர்தலில் குறைந்த பெரும்பான்மையோடு இதே அரசு ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது. 

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மிகப் பெரிய பிரச்னை. இங்கு உள்கட்டமைப்பு, நிறுவன குத்தகை மற்றும் நிதி சேவைகளில் மாற்றம் தேவை. இது தான் முதலீடுகள் வெளியே செல்ல காரணமும். வங்கிகளும் முதலீடுகளை சுலபமாக்குவது அவசியம். மத்திய வங்கி எனப்படும் ரிசர்வ் வங்கியின் இறுக்கமான கொள்கைகள் குறித்து பிரதமர் மோடி கொண்டுள்ள ஆதங்கம் நியாயமானது தான். அது சரிசெய்யப்பட வேண்டும். 

டாலரால் ஏற்படும் நெருக்கடியும் 2019 இறுதியில் சரியாகும் என்று நம்பப்படுகிறது. மேலும், இவை அனைத்தும் இங்கு வரவிருக்கும் அடுத்தடுத்த தேர்தல்களை பொறுத்து அமையும். மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றால் மட்டுமே, நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியிடம் தேவையான நிதி இருக்கும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 2019 ஆரம்பத்தில் தெளிவான பார்வை கிடைத்துவிடும். சென்செக்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 14 சதவிகிதம் உயர்ந்து உள்ளது. இதற்கு நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளும் முக்கிய காரணம்'' என்று கூறினார் 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP