மோடியால் பிரபலமான 'ரூபே'- ட்ரம்பிடம் புலம்பிய மாஸ்டர் கார்டு 

இந்தியாவில் 'ரூபே' பிரபலமாகி வருவதால் அமெரிக்காவின் மாஸ்டர், விசா கார்டு போன்ற நிறுவனங்கள் அடி வாங்கி வருகின்றன என்பதை அந்நாட்டு அதிபர் ட்ரம்பிடம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மோடியால் பிரபலமான 'ரூபே'- ட்ரம்பிடம் புலம்பிய மாஸ்டர் கார்டு 

இந்தியாவில் 'ரூபே' பிரபலமாகி வருவதால் அமெரிக்காவின் மாஸ்டர், விசா கார்டு போன்ற நிறுவனங்கள் அடி வாங்கி வருகின்றன என்பதை அந்நாட்டு அதிபர் ட்ரம்பிடம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய தேசிய கட்டண நிறுவனத்தின் 'ரூபே' கார்டை பிரதமர் நரேந்திர மோடி பிரபலப்படுத்தி வருகிறார். பல இடங்களுக்கு செல்லும் மோடி, பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, தேசத்துக்கு  சேவையாற்ற விரும்பினால், ரூபேவை பயன்படுத்துங்கள். அப்போது தான் நமது நாட்டில் தரமான சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டமைக்க முடியும் என வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசு தரப்பில் டிஜிட்டல் முறையிலான பிரவர்த்தனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பிற நாட்டு கார்டுகளைக் காட்டிலும் 'ரூபே'-யை பயன்படுத்துபவர்களுக்கு கேஷ் பேக் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. 

'ரூபே' கார்டு பயன்பாட்டினால், அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு நிறுவனம் வர்த்தக ரீதியில் அடிவாங்கி வருகிறது.  ரூபே கார்டு முறை, அனைத்து இந்திய வங்கிகளுக்கும், நிதி நிர்வாகங்களுக்கும், மின்வழி நிதி மாற்றம் வசதியை, வெளிநாட்டு நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர்கார்டுக்கு மாற்றாக அளித்து வருகிறது. 

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சகத்திடம் இந்த நிறுவனம் புகார் அளித்துள்ளது. அதில், தேச நலனை முன்னிறுத்தி, 'ரூபே' கார்டு திட்டத்தை மோடி பிரபலப்படுத்துவதால், தங்களது வர்த்தகம் பாதிக்கப்படுவதாக மாஸ்டர்கார்டு நிறுவனம் அமெரிக்க அரசிடம் கூறியிருக்கிறது. 

பிரதமர் மோடியின் டிஜிட்டல் பரிவர்த்தனை பிரச்சாரம் மக்களிடம் அடைந்திவிட்டதாகவும் இந்தியாவும் உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு நடவடிக்கைகள் பிற நாட்டு நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு என மாஸ்டர் கார்டு துணை அதிபர் ஸாரா இங்கிலீஷ் ட்ரம்ப்புக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அதேபோல ட்ரம்ப் நிருவாகத்தின் அழுத்தத்திநால் அமெரிக்க தூதரகம் தரப்பில், மத்திய அரசிடம் கவலைத் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற செய்தி ஒன்று கூறுகிறது. அனால் இதற்கு மாஸ்டர் கார்டு நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

இதனிடையே மாஸ்டர் கார்டு நிறுவன அதிபர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரியும் இந்தியவம்சாவளி தொழிலதிபருமான அஜய் பாங்கா, இந்தியாவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளார். ஏனெனில் அமெரிக்காவுக்கு வெளியே அதிகபட்சமாக 14 சதவீத வருவாயை இந்தியாவில் அந்த நிறுவனம் ஈட்டுகிறது.  அதோடு பாலிவுட் நடிகர் ஒருவரையும் வைத்து மாஸ்டர் கார்டை பிரபலபடுத்த அந்த நிறுவனம் முயற்சித்து வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP