உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு- சென்னைக்கு என்ன இடம் தெரியுமா?

உலகிலேயே தனி மனித வாழ்க்கை நடத்த செலவு மிகுந்த நகரமாக சென்னை 144 வது இடத்தை பிடித்துள்ளது.
 | 

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு- சென்னைக்கு என்ன இடம் தெரியுமா?

உலகிலேயே தனி மனித வாழ்க்கை நடத்த செலவு மிகுந்த நகரமாக சென்னை 144 வது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘மெர்சர்’ என்ற நிறுவனம், வாழ்க்கை நடத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களை வரிசைப்படுத்தியுள்ளது. 209 நகரங்கள் இந்த ஆய்வுக்கு தேர்வு செய்ய இந்நிறுவனம், குடும்பம் நடத்த ஏற்படக்கூடிய அடிப்படை செலவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், வீட்டு வாடகை, வண்டி மற்றும் போக்குவரத்து செலவு, உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு ஆய்வு செய்தது.
இந்தியாவை பொறுத்தவரை அதிக செலவு மிகுந்த நகராக மும்பை தேர்வாகி உள்ளது. உலக அளவில் மும்பை 55-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை 144-வது இடத்தையும், டெல்லி 103-வது இடத்தையும், பெங்களூருஇடத்தையும், கொல்கத்தா 182-வது இடத்தையும் பிடித்துள்ளன.           
உலகிலேயே செலவு மிகுந்த நகராக முதலிடத்தை ஹாங்காங்  பிடித்துள்ளது. டோக்கியோ, ஜூரிச், சிங்கப்பூர், சியோல், ஷாங்காய், பீஜிங், பெர்ன் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP