நஷ்டத்தில் இயங்குகிறதா உபேர்?

டாக்ஸி உள்ளிட்ட சேவைகளை மேற்கொண்டு வரும் உபேர் நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.12,000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. ஆனால், மொத்த வர்த்தக மதிப்பு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதால், அதை நஷ்டம் எனக் கருத முடியாது என உபேர் தெரிவித்துள்ளது.
 | 

நஷ்டத்தில் இயங்குகிறதா உபேர்?

டாக்ஸி சேவை, உணவு விநியோகம் உள்ளிட்ட தொழில்களை மேற்கொண்டு வரும் உபேர் நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.12,000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. ஆனால், மொத்த வர்த்தக மதிப்பு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதால், அதை நஷ்டம் எனக் கருத முடியாது என உபேர் தெரிவித்துள்ளது.

டாக்ஸி சேவைக்கான பயணக் கட்டணம், வரிகள், சுங்கக்கட்டணம், பகிர்வு முறையில் பதிவு செய்யப்படும் டாக்ஸி பயணங்கள், புதிய வாடிக்கையாளர்களின் பயணங்கள், உபேர் ஈட்ஸ் சேவையின் கீழ் உணவை விநியோகம் செய்வதற்கான கட்டணம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக உபேர் நிறுவனத்தின் மொத்த வர்த்தக மதிப்பு இருக்கிறது. இதில், வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள், கட்டணத்தை திருப்பளித்தல், ஓட்டுநர்கள் மற்றும் உணவு விடுதிகளின் வருவாய் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்டவை அடங்கும். ஆக, மொத்தம் கடந்த ஆண்டின் மொத்த வருவாய் என்பது ரூ.34,000 கோடியாக உள்ளது.

அதே சமயம், இதில் உணவு விடுதிகளுக்கான கட்டணம், ஓட்டுநர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவற்றை கழித்தது போக உபேருக்கு கிடைக்கும் வருவாய் மிக மோசமானதாகவே இருக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் சாரசரியாக மாதத்தில் ஒரு முறையேனும் கால் டாக்ஸியில் பயணம் செய்வது அல்லது உணவு வாங்குவது போன்ற நடவடிக்கைகளுக்கான தங்களின் செயலியை பயன்படுத்துவதாகவும், இது வருவாய் அதிகரிப்பதற்கான அறிகுறி என்றும் உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP