வாட்ஸ் ஆப்-இன் 'டார்க் மோட்' வசதி அறிமுகம்!

வாட்ஸ்அப் பயனாளர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துகொண்டிருந்த வாட்ஸ்அப்பின் 'டார்க் மோட்' வசதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
 | 

வாட்ஸ் ஆப்-இன் 'டார்க் மோட்' வசதி அறிமுகம்!

வாட்ஸ்அப் பயனாளர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துகொண்டிருந்த வாட்ஸ்அப்பின் 'டார்க் மோட்' வசதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

உலக அளவில் பயன்படும் மொபைல் ஆப்-களில் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒன்று வாட்ஸ் ஆப். கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் ஆப் நிறுவனம், தங்களது ஆப்-இல், தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவரக்கூடிய பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. 

அந்த வகையில், 'டார்க் மோட்'என்ற வசதியை வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த 'டார்க் மோட்' வசதியின் மூலம், ஆப் பேக்கிரவுண்ட் முழுவதும் லைட் பிளாக் கலராக மாறிவிடும். இதன்மூலமாக இரவில், வெளிச்சம் குறைந்த அளவில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தலாம். இதனால் மொபைலை கண் கூசாமல் பயன்படுத்த முடியும். பேட்டரி சார்ஜ் சேமிக்கப்படும். பாதுகாப்பானதாகவும் இருக்கும். 

பிரவுசர்கள், மெசஞ்சர் உள்ளிட்ட பல்வேறு ஆப்களில், 'டார்க் மோட்' என்ற வசதி ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், வாட்ஸ் ஆப்-இல் இது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

வாட்ஸ் ஆப்-இன் 'டார்க் மோட்' வசதி அறிமுகம்!

வாட்ஸ் ஆப் பீட்டா அப்டேட்டில் டார்க் மோட், பீட்டா 2.19.82 அப்டேட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சோதனைக்காக மட்டுமே. சோதனை முடிவுற்றவுடன் விரைவில் இது பயனாளர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP