ஃபேஸ்புக் நிறுவனத்தின் டேட்டிங் சேவை அறிமுகம்!

ஃபேஸ்புக் நிறுவனம் தனது டேட்டிங் சேவையை சோதனை முறையில், கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அளித்துள்ளது. இந்த சேவை மூலம், ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உரையாடவும், தங்கள் ஜோடிகளை தேர்வு செய்யவும் முடியும்.
 | 

ஃபேஸ்புக் நிறுவனத்தின் டேட்டிங் சேவை அறிமுகம்!

ஃபேஸ்புக் நிறுவனம் தனது டேட்டிங் சேவையை சோதனை முறையில், கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்கள் தங்கள் இணையை இணையத்தளம் மூலம் கண்டுபிடிக்க பல்வேறு செயலிகள் உள்ளன. இவற்றில் உள்ளே நுழைய ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பது அவசியம். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனமே டேட்டிங் சேவையை முதன்முறையாக கடந்த செப்டம்பர் மாதம் சோதனை முறையில் கொலம்பியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இதே டேட்டிங் சேவையை கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சோதனை முறையில் ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த சேவை மூலம், ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உரையாடவும், தங்களுக்கான ஜோடிகளை தேர்வு செய்யவும் முடியும். இந்த சேவை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP