இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

துருக்கியில் நிலவும் மோசமான பொருளாதார சூழல் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு ரூ.70.1 ஆக சரிந்துள்ளது. a
 | 

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

 துருக்கியில் நிலவும் மோசமான பொருளாதார சூழல் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு ரூ.70.1 ஆக சரிந்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் மத்திய கிழக்கில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படிக்கும் எதிராக சண்டையிட்டு வரும் சூழலில், ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.  தொடர்ந்து அணுஆயுத தடை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை துருக்கி கண்டித்தது.

மேலும், ஈரானுடனான உறவு மற்றும் வர்த்தக பரிமாறத்தை தொடர்ந்து துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு அமெரிக்கா இரட்டை வரிவிதித்து உத்தரவிட்டது. இதனால் துருக்கியில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதனை சரி செய்ய துருக்கி அதிபர் எர்டகோன் பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். துருக்கி நாட்டு பணமான லிரா அமெரிக்க டாலருக்கு நிகராக 45 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

இந்த நிலையில் இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. 

இன்று காலை 11 மணியளவில், இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.70.1 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.  நேற்றைய தினம் ரூபாயின் மதிப்பு 69.62 ஆக இருந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP