ஜிஎஸ்டியால் சரிந்தது இந்திய பொருளாதாரம்! ஐ.நா. பகீர் அறிக்கை

ஜிஎஸ்டி அறிமுகம், வங்கி மோசடிகளால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது என ஐ.நா.பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ஜிஎஸ்டியால் சரிந்தது இந்திய பொருளாதாரம்!  ஐ.நா. பகீர் அறிக்கை

ஜிஎஸ்டியால் சரிந்தது இந்திய பொருளாதாரம்!  ஐ.நா. பகீர் அறிக்கை

ஜிஎஸ்டி அறிமுகம், வங்கி மோசடிகளால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது என ஐ.நா பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்தாண்டு ஜூலை 1 முதல் ஒரேநாடு ஒரே வரி என்ற கொள்கையில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த முடிவால் உள்நாட்டு உற்பத்தி குறைந்து விட்டதாக ஐ.நா. பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டியால் சரிந்தது இந்திய பொருளாதாரம்!  ஐ.நா. பகீர் அறிக்கை

2016ல் உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவீதம் இருந்ததாகவும், 2017ல் 6.6 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் நடந்த மோசடி தொகை 9,500 கோடி ரூபாயாக தெரியவந்துள்ளது. ஆனால், இத்தொகை மேலும் அதிகமாக இருக்குமென கூறப்படுகிறது. இதனால் முதலீடு, வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும்.

ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்த போது, அதனால் ஏற்படும் பாதிப்பு மிகவும் பலமாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவர்கள் எச்சரித்த அளவுக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்படவில்லை என்பதே நிதர்சனம். நீண்ட கால திட்டமாகவே ஜிஎஸ்டியை அமல்படுத்தியதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில், இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், பொருளாதாரரும் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சி அடையும் என்பது மற்றொரு சாரரின் கருத்து. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP