மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று- ஐஎம்எப்

ஐஎம்எப் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெர்ரி ரைஸ் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
 | 

மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று- ஐஎம்எப்

மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது.
  
இது குறித்து ஐஎம்எப் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெர்ரி ரைஸ் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,  கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 7% என்ற பொருளாதார வளர்ச்சியுடன், உலகின் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகக் குறிப்பிட்டார். 

முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும், உயர் வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ள இந்தியா மேலும் பல பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் அவர் கருத்துக் கூறினார். 

அடுத்த மாத்தில் வெளியிடப்பட உள்ள உலக பொருளாதார ஆய்வறிக்கையில், இந்திய பொருளாதாரம் குறித்த விரிவான விவரங்கள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP