வாகனங்களுக்கான 3ம் நபர் காப்பீடு உயர்வு

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், கார், இரு சக்கர வாகனங்களுக்கான கட்டாய மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் கட்டணங்களை உயர்த்தி உள்ளது.
 | 

வாகனங்களுக்கான 3ம் நபர் காப்பீடு உயர்வு

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், கார், இரு சக்கர வாகனங்களுக்கான கட்டாய மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் கட்டணங்களை உயர்த்தி உள்ளது. 

இந்த கட்டண உயர்வு, வருகிற 16-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. சிறிய கார்களுக்கு 12 சதவீதமும், பெரிய கார்களுக்கு 12.5 சதவீதமும் உயருகிறது. குறைந்தபட்ச கட்டணம் 2 ஆயிரத்து 72 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 7 ஆயிரத்து 890 ரூபாயாகவும் இருக்கும்.

இருசக்கர வாகனங்களுக்கான குறைந்தபட்ச காப்பீட்டு கட்டணம் 482  ரூபாயாக  இருக்கும். 150 முதல் 350 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கான காப்பீட்டு கட்டணம் ஆயிரத்து 193 ரூபாயாக உயருகிறது. அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப் படவில்லை.

அரசு, தனியார் சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்கள் ஆகியவற்றுக்கும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 3 ஆண்டு, 5 ஆண்டு கால காப்பீட்டு கட்டணங்களில் மாற்றம் இல்லை.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP