ஐசிஐசிஐ சந்தா கோச்சர் ராஜினாமா!

வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய முறைகேடு தொடர்பான விவகாரத்தில் ஐசிஐசிஐ தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து சந்தா கோச்சர் ராஜினாமா செய்தார். அந்த பதவிக்கு அடுத்ததாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

ஐசிஐசிஐ சந்தா கோச்சர் ராஜினாமா!

வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டிர்ந்த ஐசிஐசிஐ வங்கியில் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் அவரது பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து சந்தீப் பக்ஷி தலைமை அதிகாரி பொறுப்பை ஏற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 20 வங்கிகள் சேர்ந்த கூட்டமைப்பு வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கின.

இந்தக் கடன் வழங்கியதற்கு பிரதிபலனாக வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத், அவரது நிறுவனத்திலிருந்து, 200 கோடி ரூபாய்க்கும் மேலான தொகை மற்றும் பங்குகளை முறைகேடான வகையில் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் தொடர்புடைய நிறுவனத்துக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.3250 கோடி கடனும் தற்போது வாராக்கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோகான் நிறுவனம் வாங்கிய கடனில் ஏறக்குறைய இன்னும் 2800 கோடி ரூபாய்க்கு மேல் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ சந்தா கோச்சர் ராஜினாமா!

இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு அறங்காவல் குழுவின் தலைவர் அரவிந்த் குப்தா கடந்த ஆண்டு இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்தார். வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் மூலமாக அதிகம் பயன்பெற்றது ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கொச்சாரின் குடும்பத்தினர் தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  

இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐசிஐசிஐ வங்கி அதன் நிர்வாகிகளை உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணை அமைப்பை உருவாக்கி சந்தா கோச்சரின் வங்கி நெறிமுறைகளுக்கு மாறான நடவடிக்கை மற்றும் வீடியோகான் கடன் விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது. 

அதைத்தொடர்ந்து இதுகுறித்து சிபிஐ விசாரணையும் தொடங்கியது. அந்நிலையில் இந்திய பங்குச் சந்தை வாரியத்தின் மறைமுக அழுத்தத்தின் பேரில், ஐசிஐசிஐ வங்கியின் உயர்மட்டக் குழு, அதன் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாரை அவரது தலைமைப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைப்பதாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தும், தலைமைப் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்வதாக சந்தா கோச்சர் கடிதம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி சந்தா கோச்சாரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக வங்கி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் பதவி விலகுவதால் தற்போது வங்கியின் உயர் அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் எவ்வித தொய்வும் ஏற்படாது என்றும் ஐசிஐசிஐ அறிவித்துள்ளது.

சந்தா கோச்சாரின் ராஜினாமாவை அடுத்து புதிய தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு, அந்த தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இந்த பொறுப்பில் வரும் 2023, அக்டோபர் 3ம் தேதி வரை நீடிப்பார் எனவும் ஐசிஐசி வங்கி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP