சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறையா? : ஆர்.பி.ஐ விளக்கம்

ஜூன் 1 -ஆம் தேதி முதல் அனைத்து வணிக வங்கிகளும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்ற செய்தி தவறானது என்று ரிசா்வ் வங்கி தொிவித்துள்ளது.
 | 

சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறையா? : ஆர்.பி.ஐ விளக்கம்

ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து வணிக வங்கிகளும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்ற செய்தி தவறானது என்று ரிசா்வ் வங்கி (ஆர்பிஐ) தொிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில், ஜூன் 1 -ஆம் தேதி முதல் அனைத்து வணிக வங்கிகளும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்றும், சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஆர்.பி.ஐ.  உத்தரவிட்டுள்ளதாக. சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. 

இதனை ஆர்.பி.ஐ. தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இயங்கும்படி வணிக வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது. அப்படி எந்தவிதமான உத்தரவையும் ஆா்.பி.ஐ பிறப்பிக்கவில்லை" என அவர் தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP