ஜிஎஸ்டி-யால் பொருளாதாரத்தில் வளர்ச்சி: உலக வங்கி அறிக்கை 

இந்திய பொருளாதாரம் 7.3 வளர்ச்சி விகிதத்திலிருந்து 2 ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி விதிப்பால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும் உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
 | 

ஜிஎஸ்டி-யால் பொருளாதாரத்தில் வளர்ச்சி: உலக வங்கி அறிக்கை 

இந்திய பொருளாதாரம் அடுத்த 2 ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும், ஜிஎஸ்டி அமல்படுத்திய காரணத்தால் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது. 

தெற்கு ஆசியாவுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை உலக வங்கி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி அமல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், இந்த வளர்ச்சியானது எதிர் வரும் காலகட்டங்களில் மேலும் வேகமெடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்ப்பட்டுள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமல் போன்ற அசாதாரமான யோசனைகளால் ஏற்பட்ட தற்காலிக தடங்கல்களில் இருந்து இந்திய பொருளாதாரம் விடுபட்டு இருப்பது தெரிவதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டி இருந்ததாகவும், இது சமீபத்திய ஆண்டுகளில் இதற்கு வலுவான தனியார் செலவினம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி போன்றவற்றால் இன்னும் வேகமெடுத்து இருப்பதாகவும் கூறியுள்ள அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 

மேலும், நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீத வளர்ச்சியை இந்திய பொருளாதாரம் எட்டும் எனவும் இது அடுத்த 2 ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

கணிக்க முடியாத சர்வதேச வர்த்தகச் சூழல், அதிகரிக்கும் எண்ணெய் விலை போன்ற உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களால் நடப்பாண்டில் சில சவால்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டும் என்றும் உலக வங்கி அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP