ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 32 -ஆவது கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் லேப்-டாப், டிவி உள்ளிட்ட பொருள்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டது.
 | 

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 32 -ஆவது கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில்  டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது.

மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், சிறு நிறுவனங்கள் மேற்கொள்ளும் குடியிருப்பு கட்டுமான திட்டங்களுக்கான வட்டி விகிதம், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களுக்கு வரி விலக்கு அளிப்பது, லாட்டரிகள் மீதான வரி விகித நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 22 -ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் லேப்-டாப், டிவி உள்ளிட்ட பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP