தங்கப் பத்திரத் திட்டம் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த தொகுதி விண்ணப்ப வினியோகம் நாளை தொடங்குகிறது.
 | 

தங்கப் பத்திரத் திட்டம் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தங்கப் பத்திரத் திட்டம் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த தொகுதி விண்ணப்ப வினியோகம் நாளை தொடங்குகிறது. 

இப்பத்திரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை வங்கிக் கிளைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் வரும் 20ம் தேதி ‌வரை பெறலாம். மே 4ம் தேதி தங்கப்பத்திரம் வினியோகிக்கப்படும். தங்கப் பத்திரத் திட்டத்தின் படி மக்கள் தங்கத்தில் காகித வடிவில் அல்லாமல் ஆவண வடிவில் முதலீடு செய்யலாம்.

தனி நப‌ர்கள் குறைந்த பட்சம் ஒரு கிராமிலிருந்து அதிகபட்சம் 500 கிராம் எடைக்கு நிகரான பத்திரங்களில் முதலீடு செய்யலாம். 8 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் என்ன விலை உள்ளதோ அதற்கு நிகரான தொகையை இம்முதலீட்டில் பெற முடியும். மேலும் முதலீட்டு தொகைக்கு ஆண்டுக்கு இரண்டரை சதவிகித வட்டியும் வழங்கப்படும். தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP