கடனை அள்ளித் தருமா ஜியோ பேங்க்?

முதலில் இலவசங்கள் என அறிவித்துவிட்டு பின்பு வச்சு செய்யும் நிறுவனம் தான் ஜியோ. இப்போது ஜியோ நிறுவனம் வங்கி பயணத்தில் களமிறங்கியுள்ளது.
 | 

கடனை அள்ளித் தருமா ஜியோ பேங்க்?

கடனை அள்ளித் தருமா ஜியோ பேங்க்?

முதலில் இலவசங்கள் என அறிவித்துவிட்டு பின்பு வச்சு செய்யும் நிறுவனம் தான் ஜியோ. இப்போது ஜியோ நிறுவனம் வங்கி பயணத்தில் களமிறங்கியுள்ளது. 

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் (Jio Payment Bank)  கடந்த செவ்வாய் முதல் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த வங்கியில், ரூ.1 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது, கடன் அட்டை இல்லை... டெபிட் கார்டு மட்டும்தான் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல், பேடிஎம், இந்திய அஞ்சல் சேவையைத் தொடர்ந்து ஐந்தாவதாக ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Banking Regulation Act) கீழ், ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கு உரிமம் வழங்கப்பட்டது. ஜியோ பேங்க் சேவையில் கடன்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட் திறக்க வாடிக்கையாளரின் ஆதார் அட்டை வேண்டும். ஜியோ பேங்க் சேவையானது சேமிப்பு, கடன் வழங்குதல், பண பரிமாற்றம் போன்ற சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வங்கிகளை விட கூடுதல் சேமிப்பு கணக்கிற்கு வட்டி அதிகமாக அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

500 ரூபாய்க்கு மொபைல் போன், ஜி.பி கணக்கில் இலவச டேடா என்று வழங்கி சந்தையை தன் வசப்படுத்திய ஜியோ, வங்கி சேவையில் ஏதேனும் அதிரடி சலுகை வழங்காதா என்று கடன் மன்னர்கள் காத்திருக்கிறார்கள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP