உபரி நிதியை அளிப்பது குறித்து நிபுணர் குழு: ரிசர்வ் வங்கி கூட்டத்தில் சமரசம் 

ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்திருக்கும் கூடுதல் உபரி நிதி குறித்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் கூட்டாக நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்க ரிசர்வ் வங்கி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
 | 

உபரி நிதியை அளிப்பது குறித்து நிபுணர் குழு: ரிசர்வ் வங்கி கூட்டத்தில் சமரசம் 

ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்திருக்கும் கூடுதல் உபரி நிதி குறித்த விவகாரங்கள் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசுடன் கூட்டாக நிபுணர் குழு அமைக்க ரிசர்வ் வங்கி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 

திங்கட்கிழமை (நேற்று) இரவு மும்பையிலுள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் ஆலோசனை நடந்தது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே தற்போது நிலவும் கசப்பான சூழலை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற இந்த ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் மத்திய அரசு கோரியபடி கூடுதல் உபரியாக உள்ள நிதியை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை நிபுணர் குழு அமைக்க செய்ய முடிவு எடுக்கப்பட்டது. 

ரூ.9.59 லட்சம் கோடி உபரி நிதியாக ரிசர்வ் வங்கி வசம் உள்ளது. அதில், வங்கிகளின் சீர்திருத்த திட்டங்களுக்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்கவும், ரூ.3.60 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு கோரியது. 

மேலும் இந்தக் கூட்டத்தில் உபரி நிதியில், கடன் பத்திரங்களை வாங்கி நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவெடுக்கப்பட்டது. சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் ரூ.25 கோடி வரையிலான கடனை, மறுசீரமைப்பு செய்வது பற்றியும் பரிசீலிக்கப்பட்டது. 

ரிசர்வ் வங்கி 9 சதவீத மூலதன ஆதாய விகிதத்தை கடை பிடிக்கிறது. சர்வதேச வங்கிகள் 8 சதவீத மூலதன ஆதாய விகிதத்தைதான் கடை பிடிக்கின்றன. எனவே, மூலதன ஆதாய விகிதம் தொடர்பான விதிகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. இதனால் ஆந்திரா வங்கி, அலகாபாத் வங்கி போன்ற 11 வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கெடுபிடியிலிருந்து வெளியே வரும். அதன் பின் கடன் தருவது, விரிவாக்க நடவடிக்கைகளில் அந்த வங்கிகளால் ஈடுபட முடியும். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP