கடன் மற்றும் வட்டித் தொகையை எளிதாக அறிந்து கொள்ள பைசா – இணையப்பக்கம் தொடக்கம்!

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பயனாளிகளுக்கு வங்கிக்கடன்கள் மீதான வட்டித்தொகை பற்றிய விவரங்களை மின்னணு முறையில் தெரிந்துகொள்வதற்காக 'பைசா' எனப்படும் கடன் மற்றும் வட்டித் தொகையை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் இணையப்பக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
 | 

கடன் மற்றும் வட்டித் தொகையை எளிதாக அறிந்து கொள்ள பைசா – இணையப்பக்கம் தொடக்கம்!

 
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NULM) கீழ்  பயனாளிகளுக்கு வங்கிக்கடன்கள் மீதான வட்டித்தொகை பற்றிய விவரங்களை மின்னணு முறையில் தெரிந்துகொள்வதற்காக பைசா  எனப்படும் கடன் மற்றும் வட்டித் தொகையை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் இணையப்பக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வங்கியான அலகாபாத் வங்கி இந்த இணையப்பக்கத்தை வடிவமைத்து உருவாக்கி உள்ளது. “வழங்கும் சேவைகளில் அதிகமான வெளிப்படைத்தன்மையையும், திறனையும் உறுதி செய்யும் வகையில் பயனாளிகளுடன் அரசு நேரடியாகத் தொடர்புகொள்ளும் நடவடிக்கையின் மற்றொரு முயற்சிதான் பைசா” என்று இணையப்பக்கத்தைத் தொடங்கி வைத்துப்  பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து 35 மாநிலங்களிலும்/ யூனியன் பிரதேசங்களிலும் மற்றும் அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளிலும் மண்டல ஊரக வங்கி (ஆர்.ஆர்.பி) களிலும் கூட்டுறவு வங்கிகளிலும் பைசா இணையப்பக்கம் பயன்பாட்டுக்கு வரும்  என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP