வீட்டில் இருந்தே ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டுமா?

வீட்டில் இருந்தே ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டுமா?
 | 

வீட்டில் இருந்தே ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டுமா?


இந்திய நாட்டின் ஒரு மாபெரும் அடையாள ஆவணமாக ஆதார் மாறிக்கொண்டே வருகிறது. தற்போது, மத்திய அரசின் அறிவிப்பின்படி பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2018 பிப்ரவரி 6ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சென்று ஆதார் எண்னை இணைக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியமாகவே கருதப்பட்டது.  

தற்போது இதனை எளிமையாக்கும் வகையில் மத்திய அரசு  முதற்கட்டமாக ஆதார் எண் இணைக்கப்பட வேண்டிய மொபைலில் இருந்து 14546 என்ற எண்ணிற்கு இலவசமாக அழைத்து ஆதார் எண் இணைத்து கொள்ள எளிமையான முறையை அறிமுகம் செய்துள்ளது.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வழிமுறைகள் :

ஐவிஆர்எஸ் (IVRS) எனப்படும் அழைப்பு வாயிலாக ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

* உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற ஐவிஆர்எஸ் (IVRS) எண்ணுக்கு அழையுங்கள். அழைத்த பின்னர் மொழி தேர்ந்தெடுத்த பிறகு இந்திய பிரஜையா அல்லது வெளிநாட்டவரா என்ற கேள்விக்கு பதிவு செய்ய வேண்டிய எண்ணை அழுத்திய பிறகு ஆதார் எண் இணைக்க என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.

* உங்கள் ஆதார் எண் பதிவு செய்த பிறகு உங்கள் ஆதார் எண் உறுதி செய்யப்பட உங்களது மொபைல் எண்ணுக்கு OTP  மெசேஜ் வந்து சேரும். அதனை உறுதிப்படுத்திய பிறகு ஆதார் எண் இணைக்கப்பட்ட எஸ்எம்எஸ் வந்து சேரும்.

உச்சநீதிமன்றம் அறிவித்தபடி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க 2018-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இணைக்காதவர்கள் சீக்கிரம் IVRS மூலமா இணைச்சிடுங்க. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP