டிஜிட்டல் பண பரிவர்த்தனை  ரூ.74,978 கோடியாக உயர்வு: மத்திய அரசு 

கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் காரணமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை ரூ.74,978 கோடி என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2016ஐ விட மும்மடங்கு வளர்ச்சியாகும்.
 | 

டிஜிட்டல் பண பரிவர்த்தனை  ரூ.74,978  கோடியாக உயர்வு: மத்திய அரசு 

கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சிகளின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 244.81 கோடியளவில் உயர்ந்துள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இது 2016ஐ விட மும்மடங்கு வளர்ச்சியாகும். 

இது தொடர்பாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், '' புதிய பணம் செலுத்தும் முறைகள் - BHIM-UPI, ஆதார் எண் கொண்டு பணம் செலுத்தும் முறை (AePS) மற்றும் தேசிய மின்னணு டோல் சேகரிப்பு (NETC) ஆகியவற்றை செயல்படுத்தியதன் மூலம்  டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் சூழல் எளிதாக்கப்பட்டது.  தனி நபரிடமிருந்து மற்றவருக்கு பணம் செலுத்துவது (P2P), தனி நபரிடமிருந்து வியாபாரிகளுக்கு (P2M) பணம் செலுத்துவது போன்றவையும் நடைமுறைக்கு வந்தது. 

2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.79.67 கோடி என்றளவில் இருந்த இந்த பரிவர்த்தனைகள் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத நிலவரப்படி ரூ.244.81 கோடியாக 207 சதவீதம் உயர்ந்து மும்மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. அதன்படி, கடந்த இரு ஆண்டுகளில், டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகள் இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை கண்டறிந்து அகற்றும் நோக்க்கத்தோடு செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் முறையை நாடும் வழியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு முன்னர், 2016 ஆம் ஆண்டு BHIM-UPI மூலம் மொத்தம் ரூ. 48 கோடி மதிப்பில் 1.03 லட்சம் பரிவர்த்தனைகள் நடந்திருந்ததது,  அது தற்போது அக்டோபர் 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி  ரூ.74,978 கோடி மதிப்புக்கு உயர்ந்துள்ளது. 

2016 ஆம் ஆண்டு (AePS) மூலம் மொத்தம் ரூ. 221 கோடி மதிப்பில் 2.57 கோடி என்ற எண்ணிக்கையில் பரிவர்த்தனைகள் நடந்திருந்ததாகவும் அது தற்போது அக்டோபர் 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி மொத்தம் 15.07 கோடி அளவிலான எண்ணிக்கையில் பரிவர்த்தனை மூலம் ரூ.5,893 கோடியாக வர்த்தகம் உயர்ந்து நடைபெற்றுள்ளது.

அதேபோல டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஐஎம்பிஎஸ், பிபிஐ போன்றவற்றின் மூலமான பரிவர்த்தனைகளும் உயர்ந்துள்ளன. அதிலும் முதன்முறையாக ஏற்கெனவே இருக்கும் கார்டுகளின் பரிவர்த்தனை வளர்ச்சியைக் காட்டிலும்  BHIM-UPI பரிவர்த்தனை வளர்ச்சி உயர்ந்துள்ளது '' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP