தேனா மற்றும் விஜயா வங்கிகள் பரோடா வங்கியுடன் இணைகிறது

இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியை உருவாக்கும் நோக்கத்தோடு பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகள் இணைக்கப்பட இருப்பதாக நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
 | 

ரிசர்வ் வங்கியின் உடனடியான சீர்செய்யும் நடவடிக்கை (Prompt Corrective Action (PCA)) மூலம் 3 வங்கிகள் இணைக்கப்படுகிறன. மத்திய அரசின் ஆலோசனைப்படி நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு வங்கிகள் மற்றும் சற்று தொய்வான நிலையில் இயங்கும் ஒரு வங்கி என தேர்வு செய்யப்பட்டு இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கி இணைப்பு நடவடிக்கையால் யாரும் அச்சப்பட தேவையில்லை. இவை வங்கிகளின் செயல்பாட்டினை மேலும் உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது என்று இந்த அறிவிப்பினை வெளிஇட்ட பின்னர் மத்திய நிதி அமைச்சர அருண் ஜெட்லி தெரிவித்தார். 

தேசிய ஜனநாயக காட்சியில் இது போல ஆட்சியில் ஐந்து வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது. ஐடிபிஐ வங்கியின் அதிக பங்குகளை எல்.ஐ.சி வாங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேனா மற்றும் விஜயா வங்கிகள் பரோடா வங்கியுடன் இணைகிறது

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு குறித்து அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், மற்றும் நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்  பின் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. விஜயா மற்றும் தேனா வங்கிகளின் பிராந்திய கிளைகளில் செயல்களை பரோடா பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐடிபிஐ வங்கி மற்றும் தேனா வங்கிகள் போல் இந்தியாவில் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, யூனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேசன் வங்கி மற்றும் அலஹாபாத் போன்ற பலமற்ற வங்கிகளை மற்ற வங்கிகளுடன் இணைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP