ஃபேஸ்புக்கில் அனுப்பிய மெசேஜ்- ஐ அழிக்கலாம்!

ஃபேஸ்புக் மெசெனஜரில் தவறாக அனுப்பிய குறுந்தகவல்களை டெலிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 | 

ஃபேஸ்புக்கில் அனுப்பிய மெசேஜ்- ஐ அழிக்கலாம்!

ஃபேஸ்புக்கில் அனுப்பிய மெசேஜ்- ஐ அழிக்கலாம்!

ஃபேஸ்புக் மெசென்ஜரில் தவறாக அனுப்பிய குறுந்தகவல்களை டெலிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஃபேஸ்புக்கில் மெசென்ஜர் செயலி என்க்ரிப்டெட் வெர்ஷனில் பயன்படுத்தப்படுகிறது. இதில், பயனாளர் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால், சரியான நேரத்தில் அனுப்பிய குறுந்தகவல் தானாகவே அழிக்கப்பட்டு விடும். இதற்கான கால அளவு, குறைந்தபட்சம் ஐந்து விநாடிகளில் இருந்து அதிகபட்சம் 24 மணிநேரம் என நிர்ணயித்துள்ளன. சோதனை முயற்சியில் இருக்கும் இந்த புதிய அம்சம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்கள் அனுப்பிய குறிப்பிட்ட நேரத்திற்குள் அழிக்கலாம். குறுந்தகவல் அனுப்பி அழிக்கப்பட்ட இடத்தில் Your message has been deleted என்ற வார்த்தையாக மாற்றப்படும். அதேபோன்ற வசதி ஃபேஸ்புக் மெசென்ஜரில் அறிமுகப்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP