தொடரும் ட்ரோல் ட்ரெண்ட்ஸ், மீம்ஸ்! 7 கோடி கணக்குகளை முடக்கியது ட்விட்டர்

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளது.
 | 

தொடரும் ட்ரோல் ட்ரெண்ட்ஸ், மீம்ஸ்! 7 கோடி கணக்குகளை முடக்கியது ட்விட்டர்

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை தூக்கி எறிந்த இளைய தலைமுறையினர், ட்விட்டர் என்ற ஒற்றை ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளை குறிவைத்து ட்ரோல், ட்ரெண்ட், மீம்ஸ் என்ற பெயரில் வன்முறை தூண்டுவதுடன், வதந்திகளை பரப்பிவந்ததாக ட்விட்டர் நிறுவனத்திற்கு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ட்விட்டர் மீதுள்ள மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது, முடக்கப்படும் ட்விட்டர் கணக்குகள் இரண்டு மடங்காகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து கடந்த மாதத்தில்  சர்ச்சைக்குறிய கருத்துகளை வெளியிட்ட சுமார் 7 கோடி போலி கணக்குகளை மட்டும் ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. அதாவது நாள் ஒன்றிற்கு சராசரியாக 10 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP