கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுத்த காங்கிரஸ் - வாராக்கடனை மீட்டெடுக்கும் மோடி!

தேர்தல் நெருங்கும் சூழலில் மத்திய அரசின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பெரு நிறுவனங்களுக்காகவும் முதலாளிகளுக்காகவும் மட்டுமே சாதகமாக செயல்படுவதாக பரவலாக ஒரு பிம்பம் பரப்பப்பட்டு வருகிறது.
 | 

கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுத்த காங்கிரஸ் - வாராக்கடனை மீட்டெடுக்கும் மோடி!

செயல்படாத சொத்துகளால் பாதிப்புக்குள்ளாகும் பொதுத் துறை நிறுவனங்களை மீட்டு அதனை இழுத்து மூடும் நிலையிலிருந்து வளர்ச்சிப் பாதைக்கு இட்டு செல்லும் பல நடவடிக்கைகளை மோடி அரசு வகுத்து, அதில் வெற்றியும் கண்டுள்ளது. ஆனால் செயல்படாத சொத்துகளை நாடெங்கும் குவித்துவிட்டு அதனை மூடி மறைக்கும் விதமாக தேசிய ஜனநாயக அரசு குறித்தப் பொய் பிரசாரம் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

இதன் உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். 

கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுத்த காங்கிரஸ் - வாராக்கடனை மீட்டெடுக்கும் மோடி!

முதலில் நாம் அறிய வேண்டியது "நான் பெர்பார்மிங் அசட்ஸ்" அதாவது செயல்படாத சொத்துகள் என்றால் என்ன? 

தனி மனிதர்களுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் வங்கிகள் கடன்களை வழங்கி வருகின்றன. ஆனால் பல காரணங்களை முன்னிட்டு சில சிமயங்களில் இந்த கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுவதில்லை.

உதாரணமாக, ஒரு தனி மனிதர். அவர் பணியை இழக்க நேரிடும் போது, தான் வாங்கியக் கடனைக் கட்டுவதில் அவருக்கு சிக்கல் ஏற்படலாம். அதுபோல் கார்பரேட் நிறுவனங்களில் தொடர்ந்து தொழிலாளர் பிரச்னைகள் நீடித்து வந்தால், உற்பத்தி குறைவு, விற்பனை குறைவு போன்ற பல காரணங்களால் அந்த நிறுவனத்தின் வருமானம் குறைந்து, அந்த நிறுவனம் தான் வாங்கியக் கடனைக் கட்ட முடியாமல் போகலாம்.

இவ்வாறு தொடர்ந்து 90 நாள்கள் ஒரு தனி மனிதரோ அல்லது நிறுவனமோ தான் வாங்கிய கடனின் அசலையோ அல்லது வட்டியையோ வங்கிக்கு கட்ட இயலாமல் போனால் அந்த அசலும், வட்டியும், கடன் வழங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனம் ஆகியவற்றின் நான் பெர்பார்மிங் அசட்ஸ் என்று கணக்காகி விடும். இதனால் பொதுத் துறை வங்ககிகள், நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகுகின்றன. வளர்ச்சியில் நாட்டம் செலுத்த இயலாமல் நிதிச் சுமையில் சிக்கி சின்னா பிண்ணமாகி போகும் நிலை ஏற்படுகிறது. இதனை மீட்டு எடுக்க முடியாமல், பின்னாளில் இது போன்ற நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் சூழலையும் சந்திக்கின்றன. 

சமீப காலத்தில், மத்திய அரசின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பெரு நிறுவனங்களுக்காகவும் முதலாளிகளுக்காகவும் மட்டுமே சாதகமாக செயல்பட்டு வருவதாக பரவலாக ஒரு பிம்பம்  எழுப்பப்பட்டு வருகிறது. பொதுத் துறை நிறுவனங்கள் செயல்படாத சொத்துகளால் (non-performing assets) பாதிப்புக்குள்ளாகும் சூழலில் மத்திய அரசு, கார்பரேட் நிறுவனங்கள் போன்ற பெருமுதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக பரவலாக பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. 

ஆனால் இந்த தனியார் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் செயல்படாத சொத்துகள் அனைத்தும் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராகவும், ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது மட்டுமே உருவாக்கப்பட்டது. 

கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுத்த காங்கிரஸ் - வாராக்கடனை மீட்டெடுக்கும் மோடி!

நிதி அமைச்சக அறிக்கையின்படி, இத்தகைய கடன்கள் யாவும் 2004-2014 என காங்கிரஸ் ஆட்சிபுரிந்த காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்டவை. இதன்படி, சோனியா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்த காலகட்டத்தையும், 2014-2017 வரையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியின் காலகட்டத்தையும்  ஒப்பிடும்போது நிலுவை கடன் தொகை அதிகரிப்பில் எந்தவிதமான உயர்வும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் காலகட்டத்தில் இவ்வாறான கடன்கள் மட்டும் வாரி வழங்கப்படவில்லை, அதனை மீட்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. 
இந்த மோசமான செயல்பாடே, செயல்படாத சொத்துகள் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கவும் அதனால் பொதுத்துறை வங்கிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையும் பெருமளவில் ஏற்பட்டது. 

சரி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மீது, தற்போது எதிர்க்கட்சி நாற்காலியில் இருந்து குறைகூறும் நபர்கள் மறைக்க முற்படும் விஷயத்தை நாம் தற்போது தெளிவுபடுத்தியாக வேண்டும். அதற்கு கீழ்கண்ட விவரங்களை அறிவது முக்கியத்துவம் வாய்ந்தது. 

மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

இதுவரை இருந்த ஆட்சியாளர்களில், இதற்காக கவனமான நடவடிக்கையை எடுத்தது மோடி அரசு மட்டும் தான். இந்த அரசின் நடவடிக்கைகளை சற்று உற்று நோக்குவோம்.

சொத்து தர மதிப்பீடு (Asset Quality review):

சொத்து தர மதிப்பீட்டு நடவடிக்கைக்கு பின்னர், செயல்படாத சொத்துகளின் சரியான மதிப்பீட்டை பொதுவெளியில் மத்திய அரசு வெளியிட்டது. இத்தகைய வெளியீட்டை காங்கிரஸ் அரசு செய்ததே இல்லை. அதாவது, செயல்படாத சொத்துகளால் பொதுத் துறை நிறுவனங்களின் இழப்பு 2.78 லட்சம் கோடியிலிருந்து 2015-2017 காலகட்டத்தில் 7.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்பது அந்த தர மதிப்பீட்டின் மூலம் அம்பலமானது. 

திவால் சட்ட திருத்தம் (Bankruptcy Code):

நிறுவனங்களுக்கான திவால் சட்டத்திருத்த மசோதா 2017ல் நிறைவேற்றப்பட்டது. தவறான நபர்கள் திவால் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதாவது கடனாளிகள், கடன் தொகையை செலுத்தாமல் முறைகேடான வழியில் ஏலத்தில் பங்கேற்று நிறுவனத்தை கைப்பற்றி வந்தார்கள். அதற்கு தடைபோடும் விதமாக இந்த சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. 

இந்த சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான விவாதத்தில், "வாராக்கடன் என்பது நீண்ட காலமாக இருக்கும் பிரச்னை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பொறுப்பற்ற வகையில் வங்கிகள் கடன் வழங்கியதே இதற்கு காரணம். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் வாராக்கடன் மதிப்பை விட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வாராக்கடன் மதிப்பு குறைவாக இருந்தது.

மேலும் உலக வங்கி தகவலின் படி, இந்தியாவின் வாராக்கடன் விகிதம் 2011-ம் ஆண்டில் 2.7 சதவீதமும், 2012-ம் ஆண்டில் 3.4 சதவீதமும், 2013-ம் ஆண்டில் 4 சதவீதமாக இருந்தது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு 2014-ம் ஆண்டில் 4.3 சதவீதமாகவும் 2015-ம் ஆண்டில் 5.9 சதவீதமாகவும் 2016-ம் ஆண்டில் 9.6 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது." என்று காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் குற்றம்சாட்டினார். 

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ``கோகோய் உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் படித்தவர். அவர் நிச்சயம் இந்த பழமொழியை கேட்டிருப்பார். அதாவது மூன்று பொய்கள் இருக்கிறது. பொய், தேவைக்கான பொய் மற்றொன்று புள்ளிவிவர பொய். இதில் மூன்றாவதை கோகோய் தேர்ந்தெடுத்துள்ளார். திவால் சட்டத்திருத்த மசோதா மிக அவசியமான ஒன்று. இதன்மூலம் கடனாளிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கமுடியும்"  என்று ஆணித்தனமாக தெரிவித்தார்.

கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுத்த காங்கிரஸ் - வாராக்கடனை மீட்டெடுக்கும் மோடி!
பொதுத் துறை வங்கிகள் மறுமூலதனம் (PSB Recapitalisation):

பொதுத் துறை வங்கிகளின் மூலதன தேவையை கணக்கில்கொண்டு, அவற்றுக்கு மறுமூலதனம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், பொதுத் துறை வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய் பங்கு மூலதனமாக மத்திய அரசின் சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

நடப்பு நிதியாண்டில், 20 பொதுத்துறை வங்கிகளில், 88 ஆயிரத்து 139 கோடி ரூபாய், மூலதனம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. வங்கிகளை சீரமைக்கும் நடவடிக்கையாக நிர்வாக அமைப்பின் தரம் உயர்த்தப்படவும், கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள், மீண்டும் நடக்காமல் தடுக்கப்பட, வாராக்கடன் பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம் என்ற வகையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை ஆண்டு நிதியறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

பொதுத்துறை வங்கிகளை ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் வைத்திருப்பது தான், மத்திய அரசு அமல்படுத்திய இந்த மறுமூலதன திட்டத்தின் நோக்கம்.

FRDI Bill (வங்கி பாதுகாப்பு மசோதா):

நிதித்தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) என்ற புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது.  இந்தியாவில் இப்படி ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை. 

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள், பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்றவை திவால் ஆகும் நிலைமை ஏற்படும்போது, அதை சரி செய்வதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.

இதற்காக, தீர்வு கழகம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இது, வங்கிகளின் வாராக்கடன்களை குறைத்து எழுதி, வங்கிகள் திவால் ஆகாமல் தடுக்கும். தற்போது, ரூ.1 லட்சம் வரையிலான அனைத்து சேமிப்பு தொகையும் 'சேமிப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழக சட்டம்' மூலம் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், இந்த புதிய மசோதா, மேற்கண்ட சட்டத்தை ரத்து செய்ய வழிவகுக்கிறது.

ஆனால், எப்.ஆர்.டி.ஐ. மசோதா குறித்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த மசோதா, வங்கிகளை பலப்படுத்துவதற்கு மட்டுமே. அதைவைத்து வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்படும் என்று கருதுவது தவறாகும்.

கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுத்த காங்கிரஸ் - வாராக்கடனை மீட்டெடுக்கும் மோடி!

வங்கி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா (Banking Regulation (Amendment) Bill:

வங்கி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா மூலம் வங்கிகள் தங்களது வாராக்கடன் பிரச்னைக்கு தாங்களாகவே முடிவெடுக்கும் அதிகாரம் கிடைக்கும். வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 சட்டத்துக்குப் பதிலாக, புதிதாக 'வங்கி ஒழுங்குமுறை 2017 திருத்த மசோதா' அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி குறிப்பிட்ட வாரக்கடன் சொத்துகள் மீது சம்பந்தப்பட்ட வங்கிகளே முடிவெடுக்க ரிசர்வ் வங்கி அதிகாரம் அளிக்கும். எனினும் ரிசர்வ் வங்கிக்கு அனைத்து வழிகாட்டு அதிகாரங்களும் , கட்டுப்பாடு அதிகாரங்களும் இருக்கும். நியமனம் மற்றும் நியமனங்களுக்கான ஒப்புதல், வங்கிகளின் வாராக்கடன் தீர்வுகளுக்கு வங்கிகளுக்கு ஆலோசனையைத் தொடர்ந்து அளிக்கும்.

மேற்கண்ட இத்தனை நடவடிக்கைகள் மூலம், மோடி அரசு சாதித்தது என்ன?

திவால் சட்டப்படி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது. கடந்த ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட முதல் பட்டியலில், அதிக வாராக்கடன் வைத்துள்ள 12 நிறுவனங்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தேசிய சட்ட தீர்ப்பாயம் மூலமாக மேல் நடவடிக்கைகள் எடுக்கவும் பரிந்துரை செய்தது. 

இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.5,000 கோடிக்கு மேல் கடன் நிலுவைகளை வைத்திருந்தன. ஒட்டுமொத்தமாக ரூ.1,75,000 கோடி மதிப்பிலான வாராக்கடன்களை இந்த நிறுவனங்கள் வைத்துள்ளன. அதாவது வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடனில் இந்த 12 நிறுவனங்கள் மட்டும் 25 சதவீதம் வாராக்கடனை வைத்திருந்தன.  முதற்கட்டமாக நிலுவை வைத்திருந்த ஓர் நிறுவனத்தின் பங்குகளை 1,805 கோடிக்கு என்ற பெரும் தொகைக்கு அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா குழுமம் ஏலத்தில் எடுத்தது. 

கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுத்த காங்கிரஸ் - வாராக்கடனை மீட்டெடுக்கும் மோடி!

தொடர்ந்து டாடா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல், அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களும் திவாலான நிறுவனங்களை ஏலத்தில் எடுத்தன. 

இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 2100க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களது நிலுவை கடன் தொகையை திருப்பி செலுத்தியதாகவும் இதன் மூலம் 83000 கோடி மீட்டெடுக்கப்பட்டதாகவும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம், ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன் நிறுவனம் தமது நிலுவை கடனை செலுத்த அதற்கு இணையான மதிப்பு கொண்ட அந்த குழுமத்துக்கு சொந்தமான நிலங்களை அளிப்பதாக அறிவித்தது. இது போல, இன்று வரை பல நிறுவனங்களும் நிலுவைக் கடனை செலுத்த தாமே முன்வந்த வண்ணம் உள்ளன. 

இவை அனைத்தும் செயல்படாத சொத்துகளால் பாதிப்புக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை மீட்க மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரதிபலனாகும். 

மேலும், இது போன்ற நிதி மேலாண்மை நடவடிக்கைகளால், எளிதாக வர்த்தகம் செய்யும் தரவரிசையில், இந்தியா முன்னதாக இருந்த 130வது இடத்திலிருந்து 100வது இடத்துக்கு கடந்த ஆண்டு முன்னேறிய நிலையில், நேற்று முன்தினம் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி தற்போது 77ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிதி அமைப்பில், தற்போதைய அரசின் பெரும் கட்டமைப்பு மாற்றங்கள், பிற்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை  நாட்டில் ஏற்படுத்தும் என்பதில் நாம் எந்த ஐயமும் கொள்ள வேண்டியது இல்லை.  மோடி தலைமையிலான அரசை பொத்தாம்பொதுவாக தூற்றுவதற்கும் குறை பேசுவதற்கும் முன், இந்த அரசின் நடவடிக்கைகள் மூலம்நாடு எட்டியுள்ள முன்னேற்றங்களையும், இந்தப் பிரச்னைகள் அனைத்தும் யாரால், எவ்வளவு நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு, தீர்வு காணப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது என்பதையும் நாம் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP