இந்தியாவுக்குள் நுழையும் சீன வங்கி!

சீனாவின் பொதுத் துறை வங்கியான 'பாங்க் ஆஃப் சீனா', இந்தியாவில் தனது கிளையை தொடங்க உள்ளது.
 | 

இந்தியாவுக்குள் நுழையும் சீன வங்கி!

சீனாவின் பொதுத் துறை வங்கியான 'பாங்க் ஆஃப் சீனா', இந்தியாவில் தனது கிளையை தொடங்க உள்ளது. 

பேங்க் ஆப் சீனா இந்தியாவில் கிளைகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட ஓப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சமீபத்தில் சந்தித்த போது, சீன அரசு வங்கியான 'பேங்க் ஆப் சீனா' வின் கிளையை இந்தியாவில் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.  அதன் அடிப்படையில், சீன வங்கி அனுமதிக்காக ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பம் அனுப்பியது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

'பாங்க் ஆஃப் சீனா'-வின் முதல் கிளை மும்பையில் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியாவில் கிளைத் தொடங்க சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 45 வங்கிகள் இதுவரை அனுமதி கோரியுள்ளன. அதில் முதலாவதாக சீன வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி இந்தியாவில் கிளை அமைக்கப்போகும் 2வது சீன வங்கியாக, 'பாங்க் ஆஃப் சீனா' இருக்கும். ஏற்கெனவே 'இண்டஸ்ட்ரியல் ஆண்ட் கமெர்ஷியல் பாங்க் ஆப் சீனா' என்ற வங்கி இந்தியாவில் 45 கிளைகளுடன் இயங்குகிறது. 

இந்தியாவில் நெடுங்காலமாக, கிளைகளை கொண்டிருப்பது பிரிட்டனின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி ஆகும். இதுவரை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு இந்தியாவில் 100 கிளைகளை கொண்டுள்ளது. 

இது தவிர கூக்மின் மற்றும் நாங்யுப் ஆகிய 2 கொரிய வங்கிகளின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மேபாங்க் ஆப் மலேசியா வங்கியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP