ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பு!

வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு செல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்கும் சேவைக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பு!

ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பு!

வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு செல்லாமல் ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்கும் சேவைக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள பணத்தை ஏடிஎம், காசோலை மூலம் எடுக்கும் சேவைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளது. பணம் எடுக்கும் இலவச பரிவர்த்தனைகளுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் சேவை வரியான ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் மற்றும் முந்தைய 5 வருடங்களுக்குச் சேர்த்து வங்கிகள் வரி செலுத்த வேண்டும் என வரித்துறை அறிவித்ததை தொடர்ந்து சேவைக் கட்டணம் வசூலிக்கவுள்ளதாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர் வங்கி கணக்கில் குறைந்தபட்ட இருப்புத்தொகை பராமரித்தால் அவர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் வங்கி கணக்குச் சேவையினை இலவசமாக வழங்கி வரும் நிலையில் தற்போது ஏடிஎம்களில் ஒரு முறை பணம் எடுத்தாலே கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோரையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறச் சொல்லிவிட்டு அதற்கு கட்டணம், வரி வசூலிப்பது என்பது மக்கள் மத்தியில் கோபத்தையே வரவழைக்கும். பழைய முறைக்கு சென்றால், வங்கி சேவை பாதிக்கும் அபாயம் ஏற்படும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP