ஏர் இந்தியாவில் 49% அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை அனுமதி

ஏர் இந்தியாவில் 49% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி
 | 

ஏர் இந்தியாவில் 49% அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை அனுமதி


ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 49% அந்நிய முதலீட்டுக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா தற்போது நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அந்நிறுவனம் 400 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. மேலும் நிறுவனத்திற்கு ஆகும் செலவுகளை குறைக்கும் பொருட்டு திட்டமிட்டு வருகிறது.

இந்த நேரத்தில் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு  49% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் பங்குகளை விலக்கி கொள்ளவும், அதனை விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 

மேலும், கட்டுமானத்துறை, ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் 100% அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP