பிஎஸ்என்எல் 4ஜி வந்தாச்சு!

பிஎஸ்என்எல் 4ஜி வந்தாச்சு!
 | 

பிஎஸ்என்எல் 4ஜி வந்தாச்சு!


நீண்ட காலமாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிஎஸ்என்எல் 4ஜி அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 4ஜி-யில் பல புதிய யுக்திகளை கையாண்டு, வாடிக்கையாளர்களுக்கு பல ஆஃபர்களை வழங்கி வருகின்றன. 

ஆனால், மத்திய அரசின் பிஎஸ்என்எல் மட்டும் தொடர்ந்து 3ஜி சேவைகளுடன் காலம் தள்ளி வந்தது. மற்ற நிறுவனங்களுக்கு இணையாக பல ஆஃபர்கள் கொடுத்தாலும், 4ஜி இல்லாததால் இளசுகளை ஈர்க்க முடியாமல் பிஎஸ்என்எல் தவித்து வந்தது. ஒருவழியாக அடுத்த ஆண்டு நிச்சயம் 4ஜி சேவைகள் துவக்கப்படும் என தற்போது பிஎஸ்என்எல் உறுதி செய்துள்ளது. 

முதலில் சோதனை ஓட்டமாக கேரளாவில் மட்டும் 4ஜி சேவைகளை துவக்குகிறார்களாம். இதை பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். "4ஜி சேவைகளை முதலில் கேரளாவில் இருந்து துவக்க இருக்கிறோம். 4ஜி LTEக்கு முதல் சர்க்கிள் அது தான். 3ஜி சேவைகள் மோசமாக உள்ள பகுதிகளில் இருந்து இதை துவக்க இருக்கிறோம்" என்றார் ஸ்ரீவத்சவா. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP