ப்ளிப்கார்ட்டில் இருந்து பிரிந்து தனி நிறுவனமாகும் 'போன்பே'

பிரபல ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான போன்பே, ப்ளிப்கார்ட்டில் இருந்து தனி நிறுவனமாக செயல்பட, பிளிப்கார்ட் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது.
 | 

ப்ளிப்கார்ட்டில் இருந்து பிரிந்து தனி நிறுவனமாகும் 'போன்பே'

பிரபல ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான போன்பே, ப்ளிப்கார்ட்டில் இருந்து தனி நிறுவனமாக பிரிந்து செயல்பட, ப்ளிப்கார்ட் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ப்ளிப்கார்ட், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்காக இந்தியாவில், 'போன்பே' எனும் ஆன்லைன் வாலட் வசதியை அறிமுகம் செய்தது. தற்போது, இந்தியாவில் இது அதிக மக்கள் உபயோகிக்கும் ஒரு செயலியாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற வாலட்டுகளில் பல்வேறு கேஷ்பேக் ஆஃபர்களும் வழங்கப்பட்டு வருவதால் மக்கள் தொடர்ச்சியாக உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிளிப்கார்ட்டின் ஒரு துணை நிறுவனமாக செயல்பட்டு வந்த போன்பே, தனி நிறுவனமாக செயல்பட பிளிப்கார்ட் போர்டு இன்று அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து புதிய நிதிகளை திரட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம், விரைவில் 'போன்பே' தனி நிறுவனமாக செயல்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடக்கப்படவுள்ளதாகவும் பிளிப்கார்ட் போர்டு தெரிவித்துள்ளது. 

2015ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'போன்பே' செயலி, கடந்த 2016ம் ஆண்டு ப்ளிப்கார்ட் வசம் சென்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP