வட இந்தியாவில் ஏ.டி.எம்-க்கள் முடங்கின! - 2000 ரூபாய் நோட்டு பயன்பாட்டை குறைக்க முடிவா?

பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
 | 

கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து நாடே பணத்தட்டுப்பாடு என்ற வட்டத்திற்குள் சிக்கி ஸ்தம்பித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பபெற்று புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. 

இந்தநிலையில், சில நாட்களாக மத்தியபிரதேசம், டெல்லி, பீகார், குஜராத், தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகள், போபால், சூரத், ஹைதராபாத், டெல்லி ஆகிய பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழல் நிலவுகிறது. வடமாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் வரவில்லை என புகார்கள் எழுந்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவதியுற்ற நிலை தற்போதும் தலைதூக்க தொடங்கியுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 

வட இந்தியாவில் ஏ.டி.எம்-க்கள் முடங்கின! - 2000 ரூபாய் நோட்டு பயன்பாட்டை குறைக்க முடிவா?

மக்கள் மீண்டும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ரூபாய் நோட்டுக்களை பதுக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க 500 ரூபாய் நோட்டுகளை 5 மடங்கு கூடுதலாக அச்சடித்து புழக்கத்தில் விட ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும் அதிக மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுகளின் பயன்பாட்டைக் குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP