அலிபாபாவுடன் இணையவிருக்கிறது ஆந்திர அரசு

அலிபாபாவுடன் இணையவிருக்கிறது ஆந்திர அரசு
 | 

அலிபாபாவுடன் இணையவிருக்கிறது ஆந்திர அரசு

மிக பிரபலமான ஆன்லைன் சேல் நிறுவனமான சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் ஆந்திர அரசுடன் இணைந்து வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவை சேர்ந்த முன்னணி ஆன் லைன் வர்த்தக நிறுமான அலிபாபா இந்தியாவில் கால் பதிக்க திட்டம் தீட்டி வருகிறது. அதன் தொடக்கமாக இந்தியாவில் ஆந்திர மாநிலத்தை தேர்வு செய்திருக்கிறது. அதன்படி ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க அலிபாபா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதற்காக ஆந்திரப்பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.இதற்காக ஆந்திரப்பிரதேச மாநில தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சர்  நரா லோகேஷ் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  பூமா அகிலா ப்ரியா ஆகியோருடன் அலிபாபா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் மூலம் வெகு விரைவில் இந்த திட்டமானது செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP