ஏர்செல்லை மூட அனுமதி... ஏப்ரல் 15ம் தேதிதான் கடைசி நாள்!

தமிழகத்தின் நம்பர் 1 மொபைல் நெட்வொர்க் நிறுவனமாக இருந்தது ஏர்செல். அதன் அருகில் கூட மற்றவர்களால் செல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால், இன்றைக்குத் தொழில்போட்டி காரணமாக ஏர்செல் காணாமலேயே போகப் போகிறது. ஆம், ஏப்ரல் 15ம் தேதி முதல் தன்னுடைய சேவையை முடித்துக்கொள்ள ஏர்செல் நிறுவனத்துக்கு ட்ராய் அனுமதி அளித்துள்ளது.
 | 

ஏர்செல்லை மூட அனுமதி... ஏப்ரல் 15ம் தேதிதான் கடைசி நாள்!

ஏர்செல்லை மூட அனுமதி... ஏப்ரல் 15ம் தேதிதான் கடைசி நாள்!தமிழகத்தின் நம்பர் 1 மொபைல் நெட்வொர்க் நிறுவனமாக இருந்தது ஏர்செல். அதன் அருகில் கூட மற்றவர்களால் செல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால், இன்றைக்குத் தொழில்போட்டி காரணமாக ஏர்செல் காணாமலேயே போகப் போகிறது. ஆம், ஏப்ரல் 15ம் தேதி முதல் தன்னுடைய சேவையை முடித்துக்கொள்ள ஏர்செல் நிறுவனத்துக்கு ட்ராய் அனுமதி அளித்துள்ளது. 

ஜியோ வருகைக்குப் பிறகு மற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இலவச டேடா, அளவற்ற அழைப்பு என்று ஆசை காட்டி வாடிக்கையாளர்களை ஈர்த்தது ஜியோ. இதனால் மற்ற நிறுவனங்களும் அதற்கு இணையாகச் சலுகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பெரிய பெரிய நிறுவங்கள் தப்பின. சிறிய நிறுவனங்கள் மாட்டிக்கொண்டன.

அந்த வகையில், ஏர்செல் நிறுவனம் திவால் ஆனதாகத் தன்னை அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு செய்திருக்கிறது. மேலும், தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக்கொள்ள அனுமதிக்கும்படி ட்ராயில் விண்ணப்பித்தது. 

இதை ஏற்றுக்கொண்ட ட்ராய், ஏப்ரல் 15ம் தேதியுடன் தன்னுடைய நெட்வொர்க் சேவையை நிறுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதற்குள் ஏர்செல் வாடிக்கையாளர்கள் எண்ணை மாற்றாமல், வேறு ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு மாறத் தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் விரைவாக வேறு நெட்வொர்க்கிற்கு மாற யுனிக் போர்டிங் கேடு எனப்படும் பிரத்தியேக குறியீட்டு எண்ணை விரைவாக வழங்கும்படி ஏர்செல் நிறுவனத்தை ட்ராய் கேட்டுக்கொண்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP