ஏர்செல், ஏர்டெல்லைத் தொடர்ந்து வோடஃபோனிலும் பிரச்னை

ஏர்செல், ஏர்டெல்லைத் தொடர்ந்து இன்று சென்னையில் வோடோஃபோன் நெட்வொர்க்கிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விரைவில் இது சரி செய்யப்படும் என்று வோடோஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 | 

ஏர்செல், ஏர்டெல்லைத் தொடர்ந்து வோடஃபோனிலும் பிரச்னை

ஏர்செல், ஏர்டெல்லைத் தொடர்ந்து வோடஃபோனிலும் பிரச்னை

ஏர்செல், ஏர்டெல்லைத் தொடர்ந்து இன்று சென்னையில் வோடோஃபோன் நெட்வொர்க்கிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விரைவில் இது சரி செய்யப்படும் என்று வோடோஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக அவ்வப்போது செயல் இழந்து வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில வாரங்களுக்கு முன்பு ஏர்செல் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டது. தமிழகத்தின் நம்பர் 1 நிறுவனமாக இருந்த ஏர்செல்லில் பிரச்னையா என்று வாடிக்கையாளர்கள் குழம்பினர். கடைசியில், திவால் நோட்டீசை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏர்செல்.

அதன்பிறகு நேற்று (வியாழக்கிழமை) ஏர்டெல் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டது. பலருக்கு அழைப்புகள் செல்லவில்லை. இதனால், நாடு முழுவதும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கொதித்து எழுந்தனர். ஏர்டெல்லுக்கு எதிராக சோஷியல்மீடியாவில் அனல் பறக்கும் கருத்துக்கள் பகிரப்பட்டன. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் சரியாகிவிடும் என்று மன்னிப்பு கேட்டது ஏர்டெல்.

இந்தநிலையில் இன்று, மற்றொரு மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான வோடஃபோன் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பரவலாக பல இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை. சிலருக்கு சிக்னல் இருந்தும் அழைப்புக்கள் செல்லவும் இல்லை... வரவும் இல்லை. விசாரித்ததில் தொழில்நுட்பக் கோளாறு (ஹோம் லொக்கேஷன் ரிஜிஸ்டர் பிரச்னை என்கின்றனர்) காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது... சரியாகிவிடும் என்றனர்.

இது தொடர்பாக வோடோஃபோன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இது தற்காலிகமானதுதான்... விரைவில் பிரச்னை சரி செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP