ஏர் இந்தியாவின் 49% பங்குகளை வாங்கும் வெளிநாட்டு நிறுவனம்!

ஏர் இந்தியாவின் 49% பங்குகளை வாங்கும் வெளிநாட்டு நிறுவனம்!
 | 

ஏர் இந்தியாவின் 49% பங்குகளை வாங்கும் வெளிநாட்டு நிறுவனம்!


ஏர் இந்தியா நிறுவனத்தின் 49% பங்குகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று வாங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்க இந்திய நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவியது. ஏற்கனவே ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க டாடா நிறுவனம் விருப்பம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் ஏசியா உள்ளிட்ட நிறுவனங்களும் பங்குகளை வாங்க போட்டி போட்டன. 

இந்த நிலையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க விரும்புவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பங்குகள் விற்பனை இறுதி செய்யப்பட்ட பிறகு அந்த வெளிநாட்டு நிறுவனம் குறித்த தகவல் வெளியாகும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதற்கிடையே ஏர் இந்தியாவின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனம் வாங்குவதற்கு இந்தியாவில் உள்ள சில வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP