அமெரிக்க தயாரிப்புக்கு கூடுதல் வரி: மத்திய அரசு உத்தரவு

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீதான சுங்க வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 | 

அமெரிக்க தயாரிப்புக்கு கூடுதல் வரி: மத்திய அரசு உத்தரவு

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீதான சுங்க வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான சுங்க வரியை அமெரிக்கா உயர்த்தியதற்கு பதிலடியாக அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கும் மத்திய அரசு சுங்க வரியை அதிகரித்துள்ளது.

அதன்படி, கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல் போன்ற பொருட்களின் சுங்க வரி 60 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயறு வகைள் மீதான சுங்கவரி 30 சதவீதமும், போரிக் ஆசிட் மீதான வரி 7.5 சதவீதமும், அர்திமீயா எனப்படும் இறால் மீன் வகைகள் மீதான வரி 15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரும்பு, எக்கு பொருட்கள், ஆப்பிள்கள், முத்துகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக நிதி அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அலுமினியம், ஸ்டீல் பொருட்களுக்கு 241 மில்லியன் டாலர் வரி விதிப்பதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்காவின் இந்த உத்தரவால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஸ்டீல் பொருட்களுக்கு 198.6 மில்லியன் டாலர்களும், அலுமினியத்தில் 42.4 மில்லியன் டாலரும் இழப்பு ஏற்படும் என்று இந்தியா அறிவித்தது. ஆனால், அதை அமெரிக்கா ஏற்கவில்லை,

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்துவரும் நிலையில், தற்போது இந்தியாவும் பதிலடி தரும் விதத்தில் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரியை அதிகரித்துள்ளது.

அதேசமயம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மோட்டார் சைக்கிள், இருசக்கர வாகனங்களுக்கான வரி உயர்த்தப்படவில்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP